2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்!
—————————————————————————
இந்திய ஹோட்டல் நிர்வாகக் கல்வி வரலாற்றில் முதன்முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் 50 சதவீத கல்வி உதவித்தொகை!

சென்னை, மே 17, 2016

இந்தியாவில் ஹோட்டல் நிர்வாக இயல் கல்வி அளிப்பதில் முன்னிலை வகித்து வரும் சென்னைஸ் அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் (Chennais Amirta International Institute of Hotel Management) ரூ. 2 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித் தொகைகளை வழங்கவுள்ளதாக, இன்று (17/05/2016) நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தது. இந்த உதவித் தொகையானது 2000-த்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயன்ளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 100 மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி உதவித் தொகையும் அடங்கும். இதனை பெற கீழ்க்காணும் மூன்று தகுதிகளை மாணவர்கள் கொண்டிருக்கவேண்டும்

+2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் (அல்லது) 10 ஆம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கவேண்டும்;
முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கவேண்டும்;
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு உள்ளாக இருக்க வேண்டும்.

சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. ஆர். பூமிநாதன் இது குறித்து கூறுகையில், எங்களது கல்வி நிறுவனத்தின் பயிற்சி, நடைமுறைக்கும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் செயல் முறை அடிப்படையிலானது. இது, எங்களது கல்வி நிலையத்தின் தனித்தன்மை ஆகும். இதனால் எங்ககளது தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதுடன், இங்கு பயில்பவர்களுக்கு எளிதில் வேலையும் கிடைக்கிறது. மேலும் இங்கு ஆண்டுதோறும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் மாணவர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் பொருட்டு கல்வி உதவித்தொகையினையும் வழங்கியுள்ளோம். இந்த உதவித்தொகை மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் யின்றி அவர்களது வருகை பதிவு, நடத்தை, முதல் தலைமுறை பட்டதாரி அந்தஸ்து, பொருளாதார நிலை போன்றவற்றின் அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 50 சதவீத கல்வி உதவித்தொகை பெறும் 100 மாணவர்களில் கல்வித் திறன்(Academic), வருகைப் பதிவு(Attendance), நடத்தை(Attitude) ஆகிய தகுதிகள் அடிபடையில் 50 சிறந்த மாணவர்களின் கட்டணத்தை முழு அளவில் திரும்ப அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது என்றார்.

பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தேசிய பாரத சேவக் சமாஜ் மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களான ஒ.யு.எம் – யுனிவர்சிட்டி மலேசியா(OUM – University Malaysia) மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் ஃபைனான்ஸ்(London School Of Business and Finance) ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இன்ணந்து சென்னைஸ் அமிர்தா, டிப்ளமோ இன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட்(Diploma In Hospitality Management), டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட்(Diploma in Hotel Management), டிப்ளமோ இன் ஃபுட் புரடக்ஷ்ன்(Diploma in Food Production), டிப்ளமோ இன் ஃபுட் & பெவரேஜ்(Diploma in Food & Beverage), டிப்ளமோ இன் ஃபிரன்ட் ஆபிஸ்(Diploma in Front Office), டிப்ளமோ இன் ஹவுஸ் கீப்பிங்(Diploma in Housekeeping), அட்வான்ஸ்ட் புரஃபஷனல் டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் சயன்ஸ்(Advanced Professional Diploma in Hotel Management and Catering Science ), பி.எஸ்.சி – கேட்டரிங் சயின்ஸ் & ஹோட்டல் மேனேஜ்மென்ட்(B.S.C – Catering Science and Hotel Management) உள்ளிட்ட இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய படிப்புகளை அளிக்கிறது.

இவற்றில் அனைத்திலுமாக தற்போது 10,000 மாணவர்கள் பயில்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 450 ஹோட்டல்களில் சென்னைஸ் அமிர்தா நிறுவனம் மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை அளிக்கிறது.

அண்மையில் சென்னைஸ் அமிர்தா கல்வி நிலைய வளாகத்தில் நடைப்பெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில், வேலைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பணி வாய்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற 160 முன்னணி நிறுவனங்களில் செய்னைஸ் அமிர்தாவின் 2,286 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

வரும் கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விவரங்கள்:

எஸ்.சி. (SC) (அல்லது) எஸ்.டி. (ST) பிரிவு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணத்தில் 10 சதவீத கட்டணச் சலுகை
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு முதல் செமஸ்ட்ர் கட்டணத்தில் 10 சதவீத கட்டணச் சலுகை
+2 தேர்வில் 1100 மதிப்பெண்களுக்கு அதிகமாகவோ (அல்லது) 10 ஆம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவோ பெற்ற மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை (அல்லது) +2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 5 சதவீதம் கல்வி உதவித் தொகை
மேற்கண்ட் மூன்று தகுதிகளையும் ஒருசேர பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் அதிகபட்சமாக 20 சதவீத சலுகை

தற்போது பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை விவரங்கள்:

முந்தைய செமஸ்டரில் 100 சதவீதம் வருகை தந்துள்ள 1,300 மாணவர்களுக்கு 10 சதவீத கல்விக் கட்டணம் அடுத்த செமஸ்டரின் போது கழித்துக் கொள்ளப்படும்
முந்தைய செமஸ்டரில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ள 300 மாணவர்களுக்கு 10 சதவீத கல்விக் கட்டணம் அடுத்த செமஸ்டரின் போது கழித்துக் கொள்ளப்படும்.
மேற்கண்ட இரண்டு தகுதிகளையும் ஒருசேர பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 20 சதவீத சலுகை அளிக்கப்படும்.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில், ஐந்து மாணவர்களுக்கு அவர்களின் பாராட்டத்தக்க அணுகுமுறை, கல்வித் திறன், வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

Chennais Amirta International Institute of Hotel Management, one of India’s leading institutions imparting knowledge in hospitality studies, has announced scholarships worth Rs. 2 Crores in a press meet organized in the city today (17th May 2016). These scholarships are expected to benefit more than 2000 students.

It includes scholarships of up to 50% to 100 meritorious-underprivileged students, a first-of-its-kind Offer by a Hotel Management Institute in India. The three eligible criteria’s to avail this scholarship are as mentioned below:

  • Should be a first generation graduate.
  • Should have scored above 1000 (+2) and 450 (10th standard).
  • Should have annual family earnings not exceeding Rupees One lakh and twenty thousand.

“Our institute’s teachings are of value in real time and focus on practical ways of learning. This has made our institute stand apart and demonstrate success in pass percentages and recruitment. Every year we enroll students in increasing numbers. This year we have come out with scholarships to benefit students not only on merits but also on other aspects such as attendance, attitude, first generation scholar and underprivileged status,” said Mr. R. Boominathan, CEO of the institute.

“Plans are also there to fully reimburse 50 best students among the 100 availing 50% scholarships on showcasing merits in academics, attendance, attitude throughout their course, that is 100% Scholarship” he added.

Chennais Amirta in tie up with Bharatiyar University, Bharathidasan University, Tamil Nadu Department of Employment and Training and Bharat Sevak Samaj of the country and international institutions such as OUM – University Malaysia and London School of Business and Finance, is offering UG, PG and Diploma programmes including Diploma in Hospitality Management; Diploma in Hotel Management; Advanced Professional Diploma in Hotel Management & Catering Science; Diploma in Food Production; Diploma in Food & Beverage Services; Diploma in Front office; Diploma In House Keeping; and B.Sc (Catering Science & Hotel Management) to 10,000 students. The institute facilitates internships and placements through its tie-ups with nearly 450 hospitality establishments spread globally.

In the recent past it has set a record with 100% employability in a job fair conducted at its campus where 2286 students of Chennais Amirta have secured positions in 160 Star Properties that participated in the fair.

Other Scholarship details:

A) For New Admission
• A 10% concession on First semester fee will be offered to SC/ST students.
• A 10% concession on first semester fee will be offered to first generation scholars.
• A 10% concession on first semester fee will be offered to Meritorious students of +2 and 10th who score above 1100 and 450 marks OR A 5% scholarship will be offered on first semester fee for those who score above 1000 (+2) and 400 (10th standard).
• A student qualifying under all the above said criteria will enjoy a maximum of 20% waiver in the fee.
B) For Existing Students:

• Around 1300 students who have registered 100% attendance in 1st semester will get a concession of 10% in the following semester fee.

• Around 300 students who have obtained 90% in academics will also get a 10% concession in the following semester fee.

• Those eligible under both the criteria will be entitled to a 20% waiver.

• Five students were given 100% scholarship during the press meet today, in recognition of their laudable attitude, academics and attendance levels in the 1st semester.